அசைவ உணவுகளில் கடல் உணவுகளுக்கு எப்போதுமே மவுசு அதிகம் தான், அதுவும் நண்டு என்றால் சொல்லவா வேண்டும்.
நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய கொழுப்புகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமங்கள் நிறைந்துள்ளன.
கண் கோளாறுகளை போக்குவதுடன் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
இந்த நண்டை கொண்டு மிக ருசியான நண்டு பக்கோடா செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நண்டு – 4 (பெரியது)
கடலை மாவு – 100 கிராம்
சோள மாவு- 1 டீஸ்பூன்
அரிசி மாவு- 1 டீஸ்பூன்
மிளகாய் துள்- 1 டீஸ்பூன்
சீரகத் தூள்- 1 டீஸ்பூன்
மல்லித்துள்- 1 டீஸ்பூன்
கரம் மசாலா- 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
தண்ணீர்- தேவையான அளவு
செய்முறை
முதலில் நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும், மசாலாவுக்கு தேவையான அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கலக்கி கொள்ளவும், தண்ணீர் விட்டு தேவையான பதத்துக்கு வந்த பின்னர், நண்டின் மீது தடவி அப்படியே 15 நிமிடங்களுக்கு வைத்து விடவும்.
அனைத்து பகுதிகளிலும் நன்றாக படும்படி தடவி வைக்கவும், எண்ணெய் காய்ந்ததும் நண்டை பொரித்து எடுத்தால் சுவையான நண்டு பக்கோடா தயார்!!!