கடுமையான வெயில் தாக்கத்தின் காரணமாக நமது தோலில் மெலனோசைட்ஸ் என்ற செல்கள் அதிகம் உற்பத்தி ஆகின்றது.
இதனால் நமது சருமத்தில் கரும்புள்ளிகள், தோல் வறட்சி, அலர்ஜி மற்றும் அரிப்புகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
எனவே இதுபோன்ற சருமப் பிரச்சனைகளை எளிமையாக போக்குவதற்கு, இயற்கையில்அற்புதமான வழிகள் உள்ளது.
தேவையான பொருட்கள்
- சந்தனம்
- எலுமிச்சை
- பன்னீர்
செய்முறை
நமக்கு தேவையான அளவு சந்தனத்தை தூள் செய்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறை சேர்த்து இதனுடன் 2 ஸ்பூன் பன்னீர் சேர்க்க வேண்டும்.
பின் இந்தக் பேஸ்ட்டை நமது தோலில் கருமை நிறம், கரும்புள்ளிகள் போன்றவை இருக்கும் இடங்களில் தடவி, 15 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும்.
மேலும் வெங்காயச்சாறு மற்றும் கடலைமாவை நீர் சேர்க்காமல் நன்றாக அரைத்துக் கொண்டு இந்த கலவையை நமது தோலின் மீது தடவி, 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
முல்தானி மட்டி, தயிர், பப்பாளி பழத்தின் சாறு, தயிர் ஆகியவற்றை சமஅளவு கலந்து தோலில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவ வேண்டும். இதேபோல் தொடர்ந்து செய்து வந்தால், நமது தோலின் சுருக்கங்கள் மறையும்.