மைக்செட் ஸ்ரீராம் கதையின் நாயகனாகவும் நடிகை மானசா மற்றும் ரிமி ஆகியோர் நாயகிகளாக புதிய படத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தை இயக்குனர் விவேக் இயக்கவுள்ளார்.
இயக்குனர் விவேக் இயக்கத்தில் மைக்செட் ஸ்ரீராம் கதையின் நாயகனாகவும் நடிகை மானசா மற்றும் ரிமி ஆகியோர் நாயகிகளாக புதிய படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை நடிகர் சந்தானத்தின் மைத்துனரான தங்கராஜ், வினோத் துரைசாமி ஆகியோர் என்என் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கின்றனர்.
ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாக இருக்கும் இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி, பிவிஆர் மீனா, டிவோ தலைமை அதிகாரி விசு ஆகியோருடன் 4யூ கம்பெனி நிறுவனர் ஆர்.பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அருள்ராஜ் கென்னடி இசையமைக்கும் இப்படத்திற்கு முத்து மூவேந்தர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
இவ்விழாவினை தொடந்து, படக்குழுவினர் நடிகர் சந்தானத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். படம் குறித்த செய்திகளை கேட்டறிந்த நடிகர் சந்தானம், படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இப்படம் குறித்த பிற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.