மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் எட்ஜ் 30 அல்ட்ரா பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை விற்பனை செய்து வருகிறது.
புதிய எட்ஜ் 30 அல்ட்ரா 200MP கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை கொண்டிருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு தான் எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. 200MP பிரைமரி கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா பெற்றது. இந்த நிலையில், மோட்டோரோலா நிறுவனம் தனது எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனிற்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்குகிறது.
ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் மோட்டோ டேஸ் சேலின் அங்கமாக இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. முன்னதாக மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 54 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 64 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
தற்போது ரூ. 5 ஆயிரம் தள்ளுபடியுடன் இதன் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது. இந்த தள்ளுபடி ப்ளிப்கார்ட் மோட்டோ டேஸ் சேல் நிறைவு பெறும் வரை வழங்கப்படுகிறது.
மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா அம்சங்கள்:
மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 6.73 இன்ச் பன்ச் ஹோல் கொண்ட OLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், HDR10+, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 4500 எம்ஏஹெச் பேட்டரி, 125 வாட் வயர்டு, 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 200MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12MP டெலிபோட்டோ கேமரா, 60MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. ஸ்டாக் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கும் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா 5ஜி, வைபை 6, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது.