சாம்சங் நிறுவனம் தனது அடுத்த பிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
கேலக்ஸி S23 சீரிசில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்கள் பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிமுக நிகழ்வு சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் என கூறப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு 2023 நிகழ்வை தொடர்ந்து பிப்ரவரி 17 ஆம் தேதி கேலக்ஸி S23 சீரிஸ் விற்பனை துவங்கும் என தெரிகிறது.
அம்சங்களை பொருத்தவரை சர்வதேச சந்தையில் புதிய கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதுதவிர புதிய கேலக்ஸி S23 பிளாக்ஷிப் சீரிஸ் மாடல்களின் அம்சங்கள் மற்றும் ரெண்டர்கள் ஏற்கனவே இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
அதன்படி கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களில் முந்தைய கேலக்ஸி S22 சீரிசில் வழங்கப்பட்டதை விட பெரிய பேட்டரி வழங்கப்படலாம். கேலக்ஸி S23 மாடலில் 6.1 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, பெசல்கள், 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். தற்போது ஸ்மா்ர்ட்போன் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு, சாம்சங் மெமரி கார்டு வியாபாரத்தில் ஏற்பட்ட தொய்வு உள்ளிட்ட காரணங்களால் புதிய கேலக்ஸி S23 சீரிஸ் வெளியீடு வழக்கத்தை விட முன்கூட்டியே நடைபெறும் என தெரிகிறது.
தற்போதுள்ள மாடல்களை விட புதிய கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன் விற்பனையை பெருமளவு அதிகப்படுத்தும் என கூறப்படுகிறது. கேலக்ஸி S23 மாடலில் புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 12MP கேமரா, 10MP கேமரா மற்றும் 10MP செல்பி கேமரா வழங்கப்படலாம். இத்துடன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸருடன், 3900 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.