- கேழ்வரகில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று தட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு – அரை கிலோ,
வறுத்த உளுந்து – 50 கிராம்,
கடலைப் பருப்பு – 50 கிராம்,
உப்பு, மிளகாய்த் தூள், எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
* கேழ்வரகை அரைத்து மாவாக்கிக்கொள்ளவும்.
* இந்த மாவுடன் வறுத்த உளுந்து சேர்த்து, நன்றாக அரைக்கவும்.
* அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உப்பு, மிளகாய்த் தூள், கடலைப் பருப்பைச் சேர்த்து, நன்றாகக் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.
* மாவை சிறிது எடுத்து சிறிய அளவில் உருண்டையாக உருட்டி, வாழை இலையில் போட்டு, மெல்லியதாகத் தட்டிக்கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து தட்டி வைத்துள்ள தட்டைகளை ஒவ்வொன்றாகப் போட்டு, பொரித்து எடுக்கவும்.
* சூப்பரான ஸ்நாக்ஸ் கேழ்வரகுத் தட்டுவடை ரெடி.
* இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.