- இரும்புச்சத்து குறைபாடுதான் ரத்த சோகைக்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.
- ரத்த சோகைக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துகொண்டே இருக்கிறது.
ரத்தச்சோகை என்பது என்ன?
ரத்தச்சோகை என்றால் என்ன என்று தெரிந்துகொள்வதற்கு முன் சிவப்பணுக்களைப் பற்றி தெரிந்துகொள்வோம். நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை நுரையீரலில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்குக் கொண்டு செல்வதுதான் சிவப்பணுக்களின் வேலை. இந்தச் சிவப்பணுக் களின் எண்ணிக்கை குறைந்தாலோ, அவற்றின் வடிவம் மாறினாலோ அல்லது அவற்றுக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கும் ஹீமோகுளோபினின் செறிவு குறைந்தாலோ அதை ரத்தச்சோகை என்கிறோம்.
இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. உலகளவில் இனப்பெருக்க வயதிலுள்ள பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் `அனீமியா’ எனப்படுகிற ரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் சொல்கிறது. கர்ப்பிணி களில் 40 சதவிகிதம் பேரும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 40 சதவிகிதத்துக்கும் மேலாகவும் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டுள்ள தகவலையும் அந்தப் புள்ளிவிவரம் சொல்கிறது.
சாதாரண களைப்பு, அசதி போன்ற அறிகுறிகளுடன் எட்டிப்பார்க்கும் அனீமியாவை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரிசெய்யாவிட்டால் அது உயிரையே பறிக்கும் அளவுக்கு ஆபத்தான நிலைக்கு உங்களை அழைத்துச்செல்லலாம்.
அறிகுறிகள்
அதிகமான உடல் சோர்வு
பலவீனம்
தலைச்சுற்றல்
மூச்சுத்திணறல்
சருமம் வெளிறிப்போவது
சிறு குழந்தைகளிடம் காணப்படும் பசியின்மை, எடைக்குறைவு, வளர்ச்சியின்மை, எளிதில் சோர்ந்துபோவது, படிப்பில் கவனமின்மை.
பொதுவாக 20 முதல் 50 வயதிற்குட்பட்ட பெண்கள்தான் அதிக அளவில் ரத்தசோகை பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதனால் அந்த வயதுக்குட்பட்ட பெண்கள் இரண்டு ஆண்டு காலம் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சோம்பல், உடல் சோர்வு, சருமம் மற்றும் கண்கள் வெளிர் நிறத்துக்கு மாறுதல் போன்ற ரத்தசோகைக்கான அறிகுறிகள் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது.
ஆய்வு முடிவில் 10 பெண்களில் 6 பேருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இது ரத்த சோகைக்கான ஆரம்பக்கட்ட அறிகுறியாகும். 20 முதல் 40 வயதிற்குட்பட்ட பெண்களில் 65 சதவீத பேர் இரும்புச்சத்து குறைபாடு பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதாவது ஆய்வுக்குட்டப்பட்ட 17 லட்சம் பெண்களில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் இரும்புச்சத்து குறைபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
“இரும்புச்சத்து குறைபாடுதான் ரத்த சோகைக்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. ஊட்டச்சத்துமிக்க உணவு பொருட்களை கூடுதலாக உணவில் சேர்ப்பதன் மூலம் இந்த குறைபாட்டை போக்கலாம். ஆனால் இந்தியாவில் ரத்த சோகைக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துகொண்டே இருக்கிறது. மாதவிடாய் காலத்தில் அதிக அளவில் ரத்த இழப்பு ஏற்படுவதும் இதற்கு காரணமாக இருக்கிறது.
படித்த இளம் பெண்கள் கூட மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்த இழப்பு விஷயத்தில் போதிய கவனம் செலுத்தாமல் இருக்கிறார்கள். குழந்தை பருவத்தில் அழுக்கு படிந்த பொருட்களை சாப்பிடுவது, வளர்ந்து ஆளான பிறகும் கூட களிமண் போன்ற மண் சார்ந்த பொருட்களை சாப்பிடுவது கூட ரத்தசோகைக்கு காரணமாக இருக்கிறது. ரத்தசோகை குணமானவுடன் இந்த சுபாவம் மறைந்துவிடும்.
ரத்தப்போக்கும், இரும்புச்சத்தை உறிஞ்சும் தன்மையை உடல் இழப்பதும் ரத்தசோகைக்கான பிற காரணங்களாக இருக்கின்றன. இருப்பினும் ரத்தசோகைக்கான சரியான காரணத்தைக் கண்டறிய முழுமையான ஆய்வை மேற்கொள்ள வேண்டியது அவசியம். 80 வயதுக்குட்பட்ட பெண்களில் 73 சதவீதம் பேர் ரத்தசோகை பாதிப்பு கொண்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல் 10 வயதுக்குட்பட்ட 40 சதவீத சிறுமிகள் ரத்தசோகை நோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.