Loading...
காதலர் தினம் நெருங்கிருச்சு. ..
நாமளும் காதல் பற்றி கவிதை (???) எழுதாட்டி உலகம் ஏசும் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு கவித….
அன்பே!!
உன்னை பார்த்த நிமிடமே…
எம் பி க்களை பறிகுடுத்த
சின்னம்மா போல
மனதையும்
பறி குடுத்தேன்..
கோல்டன் பேயில் அடைபட்ட
எம்எல்ஏக்கள் போல
என் மனதிலும்
ஏகப்பட்ட ஆசைகளை
அடக்கி வைத்துள்ளேன்.
எப்போது உன்
Loading...
முடிவை சொல்வாய்?.
கவர்னர் போல
காலம் தாழ்த்தாதே.
உள்துறை அமைச்சரை
கேட்டுத்தான் முடிவெடுப்பேன் என்பது போல.
வீட்டின் உள்துறை அமைச்சரான
உங்கப்பனை கேட்டுத்தான்
முடிவெடுப்பேன் என சொல்லாதே.
இறுதியாக
சின்னம்மா வார்த்தையை.
உனக்கும் சொல்லி எச்சரிக்கிறேன்..
” ஓரளவிற்கு தான் பொறுமையாக
இருக்க முடியும் “
Loading...