சூர்யா மிகவும் எதிர்பார்த்த படம் சிங்கம்3. அப்படி ஒரு கமர்சியல் படம் என்பதால் வசூல் பிச்சிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இயக்குனர் ஹரி யின் விறுவிறுப்பான திரைக்கதையில், ஸ்ருதிஹாசன், அனுஷ்கா, சூரி ஆகியோர் நடித்திருக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்க, படம் கடந்த 9 ம் தேதி ரிலீஸ்.
ஆனால், இங்கே அதற்கு முதல் நாள் அரசியல் களத்தில் மிக விறுவிறுப்பாக, சுட சுட நிகழ்வுகள் நடக்க, சிங்கம்3 வசூல் கொஞ்சம் ஓகேயாக இருந்தது என்கிறார்கள்.
மொக்கை படத்துக்கே மூணுகிலோ கேக் வெட்டுவாங்க சினிமாவில், இந்த படத்துக்கு சும்மா இருக்க முடியுமா?
தற்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துக்கொண்டு உள்ளார் சூர்யா. அந்த படத்தின் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷ் மற்றும் படக்குழுவுடன், சிங்கம் 3 வெற்றியை கேக் வெட்டி கொண்டாடி உள்ளார் சூர்யா. ஆனா, அந்த ஓவர் கான்பிடென்ட் ஹாப்பி மட்டும் முகத்தில மிஸ்ஸிங்.