வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் பொல்லாதவன்.
இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான படம் பொல்லாதவன். இப்படத்தில் தனுஷ் மற்றும் திவ்யா ஸ்பந்தனா இணைந்து நடித்திருந்தனர். மேலும் டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், சந்தானம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர்கள் தனுஷ் மற்றும் திவ்யாஸ்பந்தனா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து நடிகை திவ்யா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் இதுவரை பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.