- விஷ கன்னிகா தோஷம் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும்.
- ஒரே ஆறுதல்…ஒரு குழந்தை பாக்கியமாவது கிடைத்துவிடும்.
விஷ கன்னிகா தோஷம் குறிப்பிட்ட நாள், நட்சத்திரம் , திதி மூன்றும் சேர்ந்து வரும் நாளில் பிறந்து 2, 4, 5, 7,8,12 பாவங்களும், பாவாதிகளும் பாதிப்படையும் நிலையில் மிக மோஷமான பாதிப்பை தருகிறது,
நாள் – ஞாயிறு, செவ்வாய் , சனி;
திதி- துவிதியை, சப்தமி, துவாதசி;
நட்சத்திரம் – ஆயில்யம், கார்த்திகை, சதயம்,
ஜனன கால ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவகங்களான 1, 2, 7,8 ஆகிய பாவகங்கள் முழுவதும் கெட்டு பாவக அதிபதிகளும் , சுக்கிரனும் வலிமையற்று இருந்தால் அந்த ஜாதகம் விஷ கன்னிகா தோஷமுடையதாகும். இந்த தோஷமுடைய ஜாதகருக்கு திருமணம் நடைபெறாது. திருமணம் நடந்தாலும் வெகு நாட்களுக்கு நிலைக்காது. விஷ கன்னிகா தோஷம் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த தோஷம் என்பது மிக அரிதினும் அரிதாக உண்டாகக்கூடிய கிரக அமைப்பாகும்.
விஷ கன்னிகா தோஷம் என்பது முறையாக இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்து அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிவது. இது ஒரு முறையல்ல மூன்று நான்கு முறை கூட தொடரும். இறுதியாக வாழ்க்கைத் துணை இல்லாமல் தனியாகத்தான் வாழ வேண்டியது வரும். திருமணத்தையும் தந்து அதில் பலவித பிரச்சினைகளையும் உண்டு பண்ணி, அடுத்தடுத்து திருமணங்களிலும் மன ஒற்றுமை ஏற்படவிடாமல் தடுத்து, மண வாழ்க்கையை கேள்விக்குறியாக்குகிறது விஷ கன்னிகா தோஷம். ஒரே ஆறுதல்…ஒரு குழந்தை பாக்கியமாவது கிடைத்துவிடும். அது மட்டுமே ஆறுதலை தரக்கூடியதாக இருக்கும்.
இவர்கள் திருமணம் செய்யாமல் இருப்பதே சிறப்பு. 2-வது திருமணமோ வாழ்க்கை இழந்த நபரை திருமணம் செய்யும் போதோ தோஷத்தின் வீரியம் குறையும். எப்படிப்பட்ட திருமண தோஷமாக இருந்தாலும் எந்த விளைவாக இருந்தாலும் தசாபுத்தி கோட்ச்சார கிரகங்கள் தொடர் பெறும் காலங்களில் மட்டுமே சுப-அசுப விளைவுகள் ஏற்படும். ராகு-கேது, செவ்வாய் மட்டுமே திருமணத்தை தடை செய்யும் என்ற பொதுவான மூட நம்பிக்கையை கை கழுவி தடைக்கான காரணத்தை கண்டறிந்து உரிய பரிகாரம் செய்து பயன்பெற வாழ்த்துக்கள்.