இந்திய அணியில் உள்ள ஒட்டு மொத்த வீரர்களும் திறமை சாலிகள்.
ரோகித் சர்மா ஒரு அபாயகரமான பேட்ஸ்மேன் ஆவார்.
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி பேஸ்ட்மேன் டிவில்லியர்ஸ் கூறியதாவது:-
20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டிக்கு இந்தியாவும், நியூசிலாந்தும் தேர்வு பெறும். இதில் இந்தியா அணி வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்பற்றும் என்று நான் நம்புகிறேன்.
சூர்யகுமார் யாதவ், விராட் கோலி ஆகியோர் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். இந்திய அணியில் உள்ள ஒட்டு மொத்த வீரர்களும் திறமை சாலிகள். ரோகித் சர்மா இதுவரை தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவர் விளையாட ஆரம்பித்தால் அனல் பறக்கும். ரோகித் சர்மா ஒரு அபாயகரமான பேட்ஸ்மேன் ஆவார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் முதல் அரை இறுதியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணியும், நாளை நடைபெறும் 2-வது அரை இறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன.