சிங்கம் 3 ஒரு வாரத்தில் 100 கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சூர்யா போலீசாக நடிக்க, சிங்கம் படத்தின் 3-ம் பாகமாக, இயக்குனர் ஹரி இயக்க, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன்,விவேக், சூரி, ராதாரவி, தாகூர் அனூப் சிங் ஆகியோர் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சிங்கம் 3 படம் கடந்த 9-ம் தேதி ரிலீஸ் ஆனது.
ரிலீஸ் ஆன 6 நாட்களில் 100 கோடியை வசூல் எட்டியுள்ளதாம். சூர்யாவின் 24 படம் 18 நாட்களில் 100 கோடி வசூல் செய்ததாம். இந்த படம் கொஞ்ச நாளில் இவ்வளவு வசூல் செய்திருப்பது குழுவுக்கு மகிழ்ச்சியாம்.
இதனால், சூர்யா ஹரிக்கு புத்தம் புது பார்ச்சுனர் கார் பரிசளித்து இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
100 கோடி வசூல் செய்தது என்றால் ஐடி ரெய்டு வருகிறது என்று வசூலை வெளியே சொல்ல தெலுங்கு ஹீரோக்கள் பயப்படுகின்றனர். ஆனால், கெத்தாக அறிவித்துள்ளது சூர்யா தரப்பு.
படத்தை புறக்கணிச்சோம்ன்னு சொன்ன பதிவுகள் அதிகம். அப்புறம் எப்படி இந்த 100 கோடி வசூல். இதை கண்டுபிடிக்க ஒரு துரைசிங்கம் வரணும் போல…