Loading...
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய போயஸ் கார்டனில் இருந்து சசிகலா புறப்பட்டார். சாலை மார்க்கமாக பெங்களூரு செல்லும் சசிகலா முன்னதாக ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்தார்.
பெங்களூரு செல்லும் முன் ஜெயலலிதா சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய சசிகலா கையால் அடித்து சபதம் செய்த பின் அங்கிருந்து பெங்களூரு நீதிமன்றத்திற்கு புறப்பட்டு சென்றார். அவருடன் இளவரசியும் காரில் சென்றார்.
முன்னதாக உடல்நிலையை கருதி நீதிமன்றத்தில் சரணடைய இரண்டு வாரத்திற்கு கால அவகாசம் கோரிய சசிகலாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
Loading...