எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாகுபலி’ படம் வசூல் ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இரண்டு பாகமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.
பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் என முந்தைய பாகத்தில் நடித்த நடிகர்கள் இந்த பாகத்திலும் தொடர்ந்து நடித்துள்ளன.
இந்நிலையில், தற்போது இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பதாக தகவல்கள் பரவி வந்தது.
பிரபாஸுக்கும், ராணா டகுபதிக்கும் இடையே நடக்கும் போரில் சமாதான தூதுவராக ஷாருக்கான் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில், இவ்வாறு வெளியான தகவல் உண்மையல்ல என்று `பாகுபலி’ படக்குழு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. எங்கள் படத்தில் ஷாருக்கான் நடிப்பது எங்களுக்கு மகிழச்சியே, எனினும் `பாகுபலியின் 2′-வது பாகத்தில் அவர் நடிக்கவில்லை என்றும், அவர் நடிப்பதாக வெளியான தகவல் வதந்தி என்றும் `பாகுபலி’ படக்குழு தெரிவித்துள்ளது.
வருகிற ஏப்ரல் 28-ந் தேதி ‘பாகுபலி 2’ படம் வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.