கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டிலிருந்து வந்த 70 தொழிலாளர்கள் மற்றும் கார்டன் பணியாளா்கள் சசிகலாவை நேற்று இரவு போயஸ் இல்லத்தில் சந்தித்தனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட், நீலகிரியின் போயஸ் தோட்டம் என, கட்சியினரால் அழைக்கப்படுகிறது.
ஜெ., சசிகலா இருவரும், சில மாதங்களுக்கு ஒரு முறை, கோடநாடு எஸ்டேட்டுக்கு வந்து, வாரக்கணக்கில் தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
எதிர்க்கட்சியாக இருந்த காலம் மட்டுமின்றி, ஆளும் கட்சியாக இருந்த காலத்திலும், இந்த நடைமுறை தொடர்ந்தது.
ஜெயலலிதா வந்து செல்லும் போதெல்லாம், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அனைவரும், கோடநாடு எஸ்டேட்டில் முகாமிடுவர்.
இதனால், நாடு முழுவதும் இந்த எஸ்டேட்டின் பெயர் பிரபலமானது. இந்நிலையில்தான், சொத்துக்குவிப்பு வழக்கு மேல் முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், சசிகலாவை, ‘குற்றவாளி’ என, அறிவித்தது.
தீர்ப்பை தொடர்ந்து, எஸ்டேட்டில் மயான அமைதி நிலவியது. இதனையடுத்து கோடநாடு எஸ்டேட்டிலிருந்து வந்த 70 தொழிலாளர்கள்,
கூவத்தூரிலிருந்து போயஸ் கார்டன் திரும்பிய சசிகலாவை, போயஸ் இல்லத்தில் வந்து சந்தித்தனா். அவா்களுடன் போயஸ் கார்டன் ஊழியா்களும் சந்தித்தனா்.
அப்போது ஜெயிலில் இருந்து எப்பம்மா வருவீங்க என்று கதறி, தகறி அழுதனா். அதற்கு சசி நான் ஜெயிலுக்கே போகமாட்டேன் நெஞ்சுவழி என்று கூறி இங்கேயேதான் இருப்பேன்.
இது எனக்கு புதிது அல்ல ஏற்கனவே பல வழக்குகளைப் பார்த்தவள்தான் என்று சசி ஆறுதல் படுத்தி ஊழியா்களை அனுப்பி வைத்தார்.