பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் பேரக்குழந்தைகளான இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி சார்லோட் படித்த பள்ளியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி சார்லோட் படித்த பள்ளியின் ஆசிரியர் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த செய்தி அவர்களின் பெற்றோர்களான இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட்க்கு அதிர்ச்சியளித்துள்ளது.
ஆசிரியர் கைது
இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி சார்லோட்டின் முன்னாள் பள்ளி Thomas’s Battersea-ல், குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளியின் போதகர் துணைத் தலைவரும் ஆசிரியருமான மேத்யூ ஸ்மித் (Matthew Smith), குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்ததாக சாட்டப்பட்ட குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
மத்தேயு ஸ்மித் அப்பள்ளியில் செப்டம்பர் மாதத்தில் சேர்ந்தார், அந்த நேரத்தில் இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி சார்லோட் இருவரும் பள்ளியை விட்டு வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மித் மீதான குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டதாக பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது.
ஸ்மித் மீதான குற்றச்சாட்டுகள்
இதனிடையே, ஸ்மித் மீதான குற்றச்சாட்டுகள் தாமஸ் பேட்டர்சீ பள்ளியில் உள்ள குழந்தைகளுடன் தொடர்புடையவை அல்ல என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஸ்மித் குழந்தைகளின் அநாகரீகமான படங்களை விநியோகித்ததாகவும், குழந்தைகளை பாலியல் ரீதியாக சுரண்டியதாகவும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
அவர் மீது இந்த ஆண்டின் பிற்பகுதியில் சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் ஒரு தண்டனை விசாரணை திட்டமிடப்பட்டுள்ளது.