கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா- விக்னேஷ் சிவன் தங்களது குழந்தைகளுக்காக வருடா வருடம் பின்பற்றும் வழக்கத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என பேசப்படுகிறது.
ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நயன்தாரா, வழக்கமாக முறையை பின்பற்றி தனக்கே உரித்தான படங்களின் மூலம் ரசிகர்களின் மனதை வென்று லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வந்து கொண்டிருக்கிறார்.
சர்ச்சைகள் பல இருந்தாலும் சாதனை கற்களாக மாற்றி தென்னிந்திய சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா வரை நயன்தாராவின் புகழ் நீடிக்கிறது.
கடந்த 7 ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து வந்த நிலையில், சினிமா நட்சத்திரங்கள், நண்பர்கள், சொந்த பந்தங்கள் முன்னிலையில் கோலாகலமாக ஜீன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
கழுத்தில் மஞ்சள் தாலியுடன் ஹனிமூனில் ரொமான்ஸ் செய்த இளம்தம்பதியின் படங்கள் வைரலாகின.
இந்நிலையில் 4 மாதத்திலேயே இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகி இருப்பதாக அறிவித்தனர் விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதியினர்.
அதாவது, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தனர், இது பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது, ஆனால் சட்டங்களை முறையாக பின்பற்றியே குழந்தையை பெற்றெடுத்தாக விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில் தங்களது குழந்தைகளுக்காக வருடா வருடம் பின்பற்றும் வழக்கத்தை மாற்றிக் கொண்டுள்ளாராம் நயன்தாரா.
ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் வெளிநாடு சென்று கொண்டாடும் இந்த தம்பதியினர், இந்த ஆண்டு வீட்டில் குழந்தைகளுடன் கொண்டாட முடிவு செய்துள்ளார்களாம்.
நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுடன் நயன்தாராவுக்கு சர்ப்ரைஸ் அளிக்க முடிவு செய்திருக்கிறாராம் விக்னேஷ் சிவன்.