மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபக தலைவர் ரோஹன விஜேவீர கைது செய்யப்பட்டமை மற்றும் உயிரிழந்தமை சம்பந்தமான எந்த தகவல்களும் ஆவணப்படுத்தப்படவில்லை என தெரியவருகிறது.
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் அளித்து பதில் குறிப்பு ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ரோஹன விஜேவீரவின் கைது மற்றும் மரணம் தொடர்பில் விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை
ரோஹன விஜேவீர கைது செய்யப்பட்டமை மற்றும் உயிரிழந்தமை குறித்து குற்றவியல் விசாரணை திணைக்களமோ அல்லது பொலிஸ் திணைக்களத்தின் வேறு பிரிவுகளோ விசாரணைகளை நடத்தவில்லை அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹன விஜேவீர கடந்த 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி கொல்லப்பட்டதாக அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.
ரோஹன விஜேவீர கைது செய்யப்பட்டமை மற்றும் மரணம் சம்பந்தமாக 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14, 18 மற்றுமட் 21 ஆம் திகதிகளில் வெளியான பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருப்பதாக அந்த ஆவணத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.