ஏர்டெல் நிறுவனம் இந்திய சந்தையில் சில சலுகைகளை அதிரடியாக நீக்கியது.
நீக்கிய சலுகைகளுக்கு மாற்றாக சிலவற்றை ஏர்டெல் மாற்றியமைத்து வருகிறது.
இந்திய சந்தையில் முன்னணி டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல் ரூ. 199 விலை சலுகையை மீண்டும் அறிவித்து இருக்கிறது. முன்னதாக சில பிரீபெயிட் சலுகைகளை அதிரடியாக நீக்கிய ஏர்டெல் சிலவற்றின் பலன்களை மாற்றியமைத்து மீண்டும் அதே விலையில் அறிவித்து வருகிறது.
ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ஏர்டெல் ரூ. 199 விலை சலுகையில் தினமும் 1ஜிபி டேட்டா, 24 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டது. பின் இந்த சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த சலுகையின் வேலிடிட்டியும் 30 நாட்களாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
ஏர்டெல் ரூ. 199 சலுகையில் தற்போது 30 நாட்கள் வேலிடிட்டி, 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் இலவச ஹெலோ டியூன்ஸ், வின்க் மியூசிக் சந்தா, உள்ளூர் எஸ்எம்எஸ் ரூ. 1, எஸ்டிடி எஸ்எம்எஸ் ரூ. 1.5 பைசாவுக்கு வழங்கப்படுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டாவுக்கான கட்டணம் 1MB-க்கு ரூ. 50 பைசா வசூலிக்கப்படும். மொத்தத்தில் 300 எஸ்எம்எஸ் இந்த சலுகையில் வழங்கப்படுகிறது. எனினும், இது தினமும் அதிகபட்சம் 100 ஆகவே நிர்ணயம் செய்யப்பட்டு உளள்ளது. சலுகை தீர்ந்ததும், அதன் பலன்கள் தானாகவே காலாவதியாகி விடும்.