ஐக்கிய தேசியக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்களாக படித்த தொழிசார் நிபுணர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தீர்மானம்
இதனடிப்படையில், சட்டத்தரணிகள், மருத்துவர்கள்,பொறியியலாளர்கள் உட்பட படித்த புதியவர்கள் பலருக்கு கீழ் மட்டத்தின் பொறுப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
படித்தவர்களுக்கு கட்சியில் பொறுப்புகளை வழங்க வேண்டும் என்ற கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் முடிவுக்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
கீழ் மட்ட ஒருங்கிணைப்பு பணி்கள் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும்
கட்சியின் கீழ் மட்ட ஒருங்கிணைப்பு பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும்.அத்துடன் தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
தொகுதிகளுக்கு நியமிக்கப்பட வேண்டிய தொழில்சார் நிபுணர்கள் யார் என்பதை ஆராய்ந்து வருகின்றோம்.
ஐக்கிய தேசியக்கட்சி தற்காலிகமாக நியமித்துள்ள தொகுதி அமைப்பாளர்களில் சட்டத்தரணிகள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் இருப்பதாகவும் பாலித ரங்கே பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.