Loading...
சீனாவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் உகிபார் மாகாணம் உள்ளது. இங்குள்ள தீவிரவாதிகள் சீன அரசுக்கு இடையூறாக உள்ளனர். நேற்று மாலை பிஷான் பகுதியில் புகுந்த தீவிரவாதிகள் பொது மக்களை சரமாரியாக கத்தியால் குத்தினார்கள்.
Loading...
அதில் படுகாயம் அடைந்தவர்களை போலீசார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 5 பேர் பரிதாபமாக இறந்தனர். இதற்கிடையே கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
Loading...