மாணவர்களின் பாடசாலை வருகை வீழ்ச்சியடைந்திருப்பதாக பேராதனை பல்கலைகழகத்தின் பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி
நாட்டில் பல பகுதிகளில் உள்ள 400 ஆசிரியர்கள் மற்றும் 300 இற்கும் அதிகமான சிறுவர்களிடம் இருந்தும் கல்வி அமைச்சிடம் இருந்தும் பெறப்பட்ட தகவலுக்கமைய மாணவர்களின் வருகையானது 95 சதவீதத்திலிருந்து 80 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில மாகாணங்களில் வாரநாட்களில் திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்களின் வருகை வீழ்ச்சியடைந்துள்ளது.
இதற்கமைய, வடமாகாணத்தில் 81 சதவீதமாக இருக்கும் மாணவர்களின் வருகை வெள்ளிக்கிழமை 76 வீதமாக குறைவடைந்துள்ளதாகவும் இவ்வாறே தென் மாகாணத்தில் திட்கட்கிழமை 86 சதவீதமாக பதிவாகும் மாணவர்களின் வருகையும் வெள்ளிக்கிழமையில் 79 சதவீதமான மாணவர்களின் வருகையாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இவ்வாறு 10 முதல் 15 சதவீதமாக மாணவர்களின் வருகை குறைவடைதல் அல்லது கற்றல் செயற்பாடுகளை கைவிடுதல் போன்ற நடவடிக்கையால் மிக மோசமான நிலைமைகள் உண்டாகும் என வசந்த அத்து கோரல தெரிவித்துள்ளார்.