Loading...
ஆடவர் உலகக்கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 138 என்ற வெற்றி இலக்கினை பாக்கிஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது.
மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
Loading...
அதன்படி முதலில் களமிறங்கிய பாக்கிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக ஷான் மசூத் 38 ஓட்டங்களை அணித்தலைவர் பாபர் அசாம் 32 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் சாம் கரன் 3 விக்கெட்களை சாய்த்தார்.
Loading...