இலங்கையின் முன்னணி இளம் மனித உரிமை செயற்பாட்டாளர்களில் ஒருவரான நிர்மானி லியனகே திடீர் சுகயீனம் காரணமாக காலமானார்.
மாரடைப்பு காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் இன்று நிர்மானி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டா கோ கம போராட்ட களத்தில் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவராக நிர்மானி செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களின் இரங்கல்
காலி முகத்திடல் போராட்ட களத்தில் பிரஜைகள் போரம் என்ற அமைப்பினை உருவாக்குவதில் நிர்மானி முக்கிய வகிபாகத்தை கொண்டிருந்தார்.
மக்களின் உரிமைகள் மற்றும் ஜனநாயக செயன்முறைகள் தொடர்பில் மக்களை விழிப்பூட்டுவதில் நிர்மானி கூடுதல் முனைப்பு காட்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்மானியின் மறைவிற்கு சமூக செயற்பாட்டாளர்கள் சமூக ஊடகங்களின் இரங்கல் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.