இசையமைப்பாளர் நடிகர் என பண்முகத்தன்மை கொண்டவர் விஜய் ஆண்டனி.
சங்கரதாஸ் சுவாமிகள் 100வது நினைவு நாளில் நடிகர் விஜய் ஆண்டனி கலந்துக் கொண்டார்.
2005-ம் ஆண்டு சுக்ரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன்பின்னர் டிஷ்யூம், காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், யுவன் யுவதி, வேலாயுதம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார்.
இவர் தற்போது நடிகராகவும் வலம் வருகிறார். 2012-ம் ஆண்டு வெளியான நான் படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார். இதனை தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், சைத்தான், காளி, திமிரு புடிச்சவன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து அனைவரையும் கவர்ந்தார். தற்போது இவர் கைவசம் கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில், ரத்தம் உள்ளிட்ட படங்கள் உள்ளன.
இந்நிலையில் சங்கரதாஸ் சுவாமிகளின் 100வது ஆண்டு நினைவு நாளையொட்டி புதுச்சேரியில் நாடகக்கலைஞர்கள் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் விஜய் ஆண்டனி கலந்துகொண்டு நடிரோட்டில் நடனமாடி உற்சாகப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.