வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் லத்தி.
இப்படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘வீரமே வாகை சூடும்’ படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் ‘லத்தி’. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். ‘ராணா புரொடக்ஷன்’ சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர்.
‘லத்தி’ திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இதனிடையே இப்படத்தின் முதல் லிரிக் பாடலான ‘தோட்டா லோடாக வெயிட்டிங்’ வெளியானது. இந்நிலையில் லத்தி படத்தின் 2வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை கார்த்திக் நேத்தா எழுத, பாடகர்கள் ரஞ்சித் கோவிந்த் மற்றும் சுவேதா மோகன் பாடியுள்ளனர். ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம் என்ற வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.