- இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட்டில் தோல்வியடைந்தது.
- முதலில் பேட்டிங் செய்த அந்த அணியால் 137 ரன்களே அடிக்க முடிந்தது.
மெல்போர்ன் மைதானத்தில் நேற்று உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்து 137 ரன்களே அடித்தது. பின்னர், 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸின் (52 நாட்அவுட்) சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் தோல்வியடைந்ததும், அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் இதயம் உடைந்தது போன்ற எமோஜி படத்தை வெளியிட்டிருந்தார்.
அதற்கு ரி-டுவீட் செய்திருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ”இது கர்மா (It’s call (sic) karma) என்று அழைக்கப்படும்” எனப் பதில் அளித்திருந்தார்.
இதுகுறித்து சற்றும் எதிர்பார்க்காத சோயிப் அக்தர் ”இதை நீங்கள் உணர்வுப்பூர்வமான ட்வீட் என அழைக்கிறீர்கள்” என அக்தர் பதில் அளித்துள்ளார்.
கிரிக்கெட் விமர்சகரான ஹர்சா போக்லே ”பாகிஸ்தான் அணிக்கு பாராட்டு. அவர்கள் செயல்பட்ட விதத்தில் சில அணிகள் 137 ரன்னுக்குள் எதிரணியை கட்டுப்படுத்தும். சிறந்த பந்து வீச்சு அணி” என ட்வீட் செய்திருந்தார்.