Loading...
இலங்கையில் வன விலங்குகளினால் வருடாந்தம் 54 பில்லியன் ரூபாய் பெறுமதியான பயிர்களுக்கு சேதம் ஏற்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பயிர்களுக்கு அதிக சேதம் விளைவிக்கும் விலங்குகளில் யானைகள், பன்றிகள், குரங்குகள் , மயில்கள், முள்ளம்பன்றி, அணில் மற்றும் காட்டுப்பன்றிகள் ஆகியவை அடங்கும்.
Loading...
இவற்றில் காட்டு யானைகள் தவிர மற்ற ஆறு விலங்குகள் பயிர் சேதம் விளைவிக்கும் விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
வன விலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதம் தொடர்பான விசேட அறிக்கையொன்றை ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்துள்ளதுடன் அந்த அறிக்கையின் பிரகாரம் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
Loading...