பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ‘லவ் டுடே’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் தற்போது இயக்கி நடித்த படம் ‘லவ் டுடே’. இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்த படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் இடம்பெற்ற என்னை விட்டு பாடல் பலரின் கவனத்தை ஈர்த்து ஹிட் அடித்தது. இந்த பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடியிருந்தார்.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற என்னை விட்டு பாடலை யுவன் ஷங்கர் ராஜா குரலில் இயக்குனர் பிரதீப் வெளியிட்டிருக்கிறார். அதில், நான் உங்களுக்கு உறுதியளித்தபடி, லவ் டுடே படத்தின் என்னை விட்டு பாடல் யுவன் குரலில் இதோ. எனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்று பதிவிட்டுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.