பருத்தித்துறையில் அண்மைக் காலமாக வீதிகளில், நகர்ப் பகுதி மற்றும் கடைத் தொகுதிகளில் பெண்களுக்கு எதிரான துர் நடத்தையிலும், துன்புறுத்தல்களிலும் ஈடுபட்டு வரும் ஒரு குழு தொடர் சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனடிப்படையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னரும் இவ்வாறான திடீர் சுற்றிவளைப்பின் போது 13 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.
நேற்று இரவும் மின்துண்டிப்பு வேளையில், பொலிசார் திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.
இதன் போது இருவர் கைதுசெய்யப்பட்டு, வழக்குப் பதிவுசெய்த பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பொலிஸ் நிலையிய பொறுப்பதிகாரி தலமைப் பொலிஸ் பரிசோதகர் பியந்த அமரசிங்க தலமையில் இவ் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகிறது.
பருத்தித்துறை பொலிசாரின் இவ் நடவடிக்கை மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளதுடன், தொடர் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.