அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா ‘கனெக்ட்’ படத்தில் நடித்துள்ளார்.
‘கனெக்ட்’ படத்தின் டீசர் நயன்தாரா பிறந்தநாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா ‘கனெக்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்குச் சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
‘கனெக்ட்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த ஆண்டு நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் தேதியை புதிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படத்தின் டீசர் நயன்தாராவின் 38-வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற நவம்பர் 18-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2015-ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான ‘மாயா’ திரைப்படத்தை அஸ்வின் சரவணன் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.