சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சரணடைவதற்காக காரில் செல்கிறார்.
சசிகலா, தனக்கு சிறையில் தனி அறை, வீட்டு சாப்பாடு, மினரல் வாட்டர் உள்ளிட்ட வசதிகள் வேண்டும் என கேட்டுள்ளார்..
தனக்கு சர்க்கரை நோய் இருப்பதால் வீட்டு சாப்பாடு வேண்டும்; வெஸ்டன் டைப் டாய்லட், 24 மணி நேரமும் வெந்நீர்,
மினரல் வாட்டர் உள்ளிட்ட வசதிகள் செய்து தர வேண்டும் என சிறை அதிகாரிகளிடம் சசிகலா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தனி அறையில் கட்டில் மற்றும் டிவி வசதி வேண்டும் என சசிகலா கேட்டுள்ளார். இதனை செய்து தர சிறை அதிகாரிகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் சசிகலாவிற்கு சிறையில் உணவு தயாரித்து கொடுத்தல் உள்ளிட்ட உதவிகளுக்கு தனி உதவியாளர் ஒருவரும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.