ரொமாண்டிக் திரில்லர் படமாக உருவாகிவரும் ‘என்னோடு விளையாடு’ திரைப்படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என எதிர்ப்பார்ப்பதாக நடிகர் பரத் தெரிவித்துள்ளார்.
‘என்னோடு விளையாடு’ திரைப்படம் குறித்து சென்னையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த பரத், ஒரு சிறிய இடைவேளைக்கு பின்னர் இப்படத்தை நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். இப்படம் என்னுடைய திரையுலக பயணத்தில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும் எதிர்ப்பார்க்கிறேன்.
என்னுடைய பதினான்கு ஆண்டு கால திரையுலகில் குதிரை பந்தயம், குதிரை பந்தய சூதாட்டம் என்ற பின்னணியை வைத்து ஒரு முழுத்திரைக்கதையை நான் தமிழ் சினிமாவில் பார்த்ததில்லை. அந்த வகையில் இந்த திரில்லர் படம் புதிதாக இருக்கும். ரசிகர்களுக்கும் இப்படம் புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று நினைக்கிறேன் என்றும் தெரிவித்தார்.