கோவக்காயில் பல சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன.
இதய நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க கோவக்காய்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
தேவையான பொருட்கள்
கோவக்காய் – 300 கிராம்
பச்சை மிளகாய் – 4
வெங்காயம் – 2
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், கோவக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும், அதில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் கோவைக்காயை சேர்த்து வதக்கவும்.
அடுப்பை மிதமான தீயில் மூடி போட்டு 15 நிமிடம் வேகவிடவும்.
காய் பாதி வெந்த பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விடவும்.
கடைசியாக கோவக்காய் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
இப்போது சூப்பரான கோவக்காய் பொரியல் தயார்!