நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு சமீபத்தில் வாடகைதாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர்.
திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியது. அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்தது. தற்போது நயன்தாரா குழுந்தைகளை பார்ப்பதை முழுநேர வேலையாக செய்து வருகிறார்.
இவர் இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாராவிற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “இது உன்னுடனான எனது 9-வது பிறந்தநாள் நயன். உன்னை எப்போதும் சக்திவாய்ந்த பெண்ணாகவே பார்த்துள்னே். இதுவரையில் உன்னை வெவ்வேறு வடிவமாக பார்த்துள்ளேன்.
வாழ்க்கை மற்றும் அனைத்திலும் நீ காட்டும் நேர்மையால் எப்போதும் நான் ஈர்க்கப்பட்டுள்ளேன். ஆனால் இன்று, தாயாக உன்னை பார்க்கும்போது.. இதுவே உனது மகிழ்ச்சியான மற்றும் முழுமையான உருவாக்கம். நீ இப்போது முழுமையாகிவிட்டாய். நீ மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.