நாட்டில் காணப்படும் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் விமர்சனத்திற்கு உரியதல்ல என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்வதற்கு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான நான்காம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்றும் நாட்டின் சட்டங்கள் முறையாக முன்னெடுக்கப்படாமை பிரச்சினைக்கு வழிகோலுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
30 வருட யுத்தத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளினால் மத்திய தர வருமான நாடாக இருந்த இலங்கை குறைந்த வருமானம் கொண்ட நாடாக மாற்றப்பட்டுள்ளது என்றும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொள்ள பலரும் முன்வைத்த யோசனைகளை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என்றும் ரவூப் ஹக்கீம் கேட்டுக்கொண்டுள்ளார்.