Loading...
சிலருக்கு அடிவயிற்றின் இடது பக்கத்தில் கடுமையான வலி ஏற்படும் அல்லவா?
அப்படி ஏற்படும் இடதுபக்க வயிற்று வலியை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவரிடம் சென்று அதற்கான பரிசோதனையை செய்ய வேண்டும்.
Loading...
ஏனெனில் அது குறிப்பிட்ட சில நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகளாகும்.
வயிற்றின் இடதுபக்கத்தில் ஏற்படும் வலி எதற்கான அறிகுறிகள்?
- நமது சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் தொற்றுகள் இருந்தால், அது நம்முடைய அடிவயிற்றின் இடது பக்கத்தில் கடுமையான வலியை ஏற்படுத்தும்.
- நமது அடிவயிற்றில் இடது பக்கத்தில் வலி ஏற்படுவதற்கு மற்றொரு காரணம் சிறுநீர்ப்பை அழற்சி ஆகும். இதனால் அடிவயிற்றில் வலியுடன், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனையும் ஏற்படும்.
- ஒருவருக்கு வயிற்றில் வலி ஏற்படும் போது, மலச்சிக்கல் பிரச்சனையுடன் வயிற்றில் வாய்வு அதிகமாக தேங்கி அசௌகரியத்தை உணரும் சூழ்நிலைகள் ஏற்படும்.
- நமது அடிவயிற்றில் வலி இருந்தால், அது குடலில் அழற்சி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு, குடல் எரிச்சல் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
- கிரோன் நோயின் முக்கிய அறிகுறியாக அடிவயிற்றின் இடது பக்கத்தில் வலியை ஏற்படுத்தி, செரிமான பாதையில் அழற்சி போன்ற பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
- ஒருவரின் சிறுநீரகத்தில் சிறுநீரக கற்கள் இருந்தால், அவர்களின் உடம்பில் இடுப்பு மற்றும் அடிவயிற்றின் இடது பக்கத்தில் கடுமையான வலியை ஏற்படுத்தும்.
- கருத்தரித்த பெண்களுக்கு அடிவயிற்றின் இடது பக்கத்தில் வலி ஏற்பட்டால், அது சிசு கருப்பையினுள் வளராமல், இடது பாலோப்பியன் குழாயினுள் வளர்கிறது என்று அர்த்தமாகும்.
Loading...