முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 77 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தங்காலை நகர மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு மத வழிப்பாட்டு நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 77 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தங்காலை நகர மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு மத வழிப்பாட்டு நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டது.
கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி நாட்டை விட்டு வெளியேறி இலங்கை திரும்பிய பின்னர் கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்வாக இது கருதப்படுகிறது.
இதில் கலந்து கொண்ட கோட்டாபய ராஜபக்சவுடன் மஹிந்த ராஜபக்ச மட்டும் சிறிது நேர சந்திப்பை நடத்தியதாகவும் ஆனால் ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ அவர்களுடன் பேசிக்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.
மத வழிப்பாட்டிற்கு வந்த பலரும் இதைத் தெளிவாக அவதானித்துள்ளதாக அங்கு சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில், மஹிந்த ராஜபக்சவின் குடும்ப உறுப்பினர்களை, அயோமா ராஜபக்ஷ பெரிதாக கண்டுக் கொண்டதில்லை என தெரிவிக்கப்படுகிறது.