பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். நீண்ட தூரப் பயணங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வளர்ச்சியுண்டு.
கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். உத்தியோக நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வீடு, இடம் வாங்க எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டு. பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும்.
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். வாகன யோகம் கிட்டும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் உங்கள் கருத்துக்களுக்கு ஒத்துவருவர்.
புதிய பாதை புலப்படும் நாள். நண்பர்களிடம் நாசூக்காகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வருமானம் திருப்தி தரும். காணாமல் போன பொருளொன்று மீண்டும் கைக்கு கிடைக்கலாம்.
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்து முடிப்பீர்கள். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும். புதிய முயற்சி வெற்றி தரும்.
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். வரவை விட செலவு கூடினாலும் சேமிப்பில் ஒன்றும் குறையாது. திருமண முயற்சி வெற்றி தரும்.
வரவு திருப்தி தரும் நாள். உடல் நலத்தைச் சீராக்கிக் கொள்ள உணவில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. குல தெய்வ வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். செல்வந்தர்களின் சந்திப்பு கிட்டும்.
நினைத்தது நிறைவேறும் நாள். சுபகாரியங்களை முடிக்க சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்கள். பயணங்கள் மூலம் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். செல்போன் வழித் தகவல் செவிகுளிரச் செய்யும்.
கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நாள். வருங்காலக் கனவுகளை நனவாக்க பயணமொன்றை மேற்கொள்வீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்.
புதுமுயற்சியில் வெற்றி கிட்டும் நாள். குடும்பத்தினர்கள் உங்கள் கருத்தை ஆமோதிப்பர். விலகியவர்கள் விரும்பி வந்து சேருவர். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தை வாங்கும் எண்ணம் மேலோங்கும்.
உற்சாகத்தோடு செயல்படும் நாள். காலையில் செய்ய மறந்த காரியமொன்றை மாலையில் துரிதமாகச் செய்து முடிப்பீர்கள்.எதற்கும் தைரியமாக முடிவெடுப்பீர்கள். வருமானம் போதுமானதாக இருக்கும்.
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள கொஞ்சம் அலைச்சல்களை சந்திக்க நேரிடும். நண்பர்கள் மனம் கோணாது நடந்து கொள்வது நல்லது.