சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் மூலம் 2020 வாக்கில் சியோமி நிறுவனம் ஃபிட்னஸ் டிராக்கர் சந்தையில் களமிறங்கியது.
ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் மூலம் சியோமி நிறுவனம் ஃபிட்னஸ் டிராக்கர் சந்தையில் களமிறங்கியது. இதே மாடல் சர்வதேச சந்தையில் Mi ஸ்மார்ட் பேண்ட் C பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 1.08 இன்ச் TFT LCD கலர் பேனல், டச் இன்புட், 24 மணி நேர இதய துடிப்பு மாணிட்டரிங், 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
தற்போது சியோமி நிறுவனம் ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் 2 மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. மேலும் இந்த ஃபிட்னஸ் டிராக்கர் ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உற்பத்தி நிலையை எட்டி இருப்பதாக கூறப்படுகிறது. டிப்ஸ்டர் முகுல் ஷர்மா ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் 2 மற்றும் அதற்கான சார்ஜிங் டாக் உற்பத்தி துவங்கி விட்டதாக தெரிவித்து இருக்கிறார்.
புதிய ஃபிட்னஸ் டிராக்கர் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த ஃபிட்னஸ் பேண்ட் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், விரைவில் இதன் அம்சங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். புதிய ஃபிட்னஸ் பேண்ட் மாடலில் ரெட்மி ஸ்மார்ட் பேண்ட்-ஐ விட மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் அம்சங்கள்:
ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் மாடலில் 1.08 இன்ச் 16-பிட் கலர் TFT LCD பேனல், 128×200 பிக்சல் ரெசல்யூஷன், டச் இன்புட், 200 நிட்ஸ் பிரைட்னஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஃபிட்னஸ் பேண்ட் இதய துடிப்பு விவரங்களை ரியல்-டைமில் டிராக் செய்யும் வசதி கொண்டுள்ளது. மேலும் இதய துடிப்பில் சீரற்ற நிலை ஏற்பட்டால் எச்சரிக்கை செய்யும் வசதி கொண்டுள்ளது. இதில் 5 ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.
இத்துடன் 50-க்கும் அதிக கஸ்டமைசேஷன் ஆப்ஷன்கள், யுஎஸ்பி சார்ஜிங், 130 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 14 நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது. ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் விலை 22 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,793 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.