Loading...
யுத்தம் காரணமாக தனது கணவன்மார்களை இழந்த பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இதனை தெரிவித்துள்ளார். அரச படையினர் மற்றும் தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்களினாலும், இவ்வாறான ஆபத்துகளை பெண்கள் எதிர்நோக்க நேரிடலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
மேலும், யுத்தம் காரணமாக கணவனை இழந்த பெண்கள் பலர் அதிகாரிகளினால் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சில தமிழ் அதிகாரிகளும் இவ்வாறு சித்திரவதைக்கு உட்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள அவர், இதன் காரணமாக பெண்கள் உள ரீதியான பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Loading...