ஐயப்பன் அமர்ந்து தரிசனம் தரும் நிலை வித்தியாசமானது.
யோக பாதாசனம் அல்லது யோக சித்தாசனம் என்று கூறலாம்.
சபரிமலையில் ஆனந்த சொரூபன் ஐயப்பன், அமர்ந்து தரிசனம் தரும் நிலை வித்தியாசமானது. இது ஆசன ரூபம் அதாவது, யோகபாதாசனம் அல்லது யோக சித்தாசனம் என்று கூறலாம். ஐயப்பன் தபசினைக் காண்பிப்பதாகவும் பூரணதேபாவர தியான ரூபத்திலிருக்கிறார். (மூல விக்ரகத்தில் கண் சற்றே திறந்த தியான ரூபத்தில் தான் சிலை உள்ளது).ஐயப்பனின் கால்களைச் சுற்றியுள்ள வஸ்திரத்திற்கு வஸ்திரபந்தம் அல்லது யோக பட்டம் என்று பெயர் ஐயனின் வலதுகை ஞான முத்திரை காட்டி நம்மை ஆசீர்வதிக்கிறது.
இந்த முறையில் மூன்று விரல் நீட்டியும், ஆள்காட்டி விரல் மடக்கி கட்டை விரலோடு சேர்கிறது. இதன் பொருள் மும்மலமாகிய ஆணவம், கண்மம் மாயை ஆகியவற்றை எவனொருவன் விட்டு விட்டு தெய்வ சன்னதியை அடைகிறானோ அவனுடைய ஜீவாத்மாவானது பரமாத்மாவை வந்து அடைகிறது என்று அர்த்தம்.
சுவாமியின் மூன்று நீட்டிய விரல் ஆணவம், கண்மம் மாயையும், ஆள்காட்டிவிரல் ஜீவாத்மாவையும், கட்டை விரல் பரமாத்வாவையும் குறிக்கிறது. இது தவிர மூன்று விரல்களையும் சத், சித் ஆனந்தம் (சச்சிதானந்தம்) என்றும் கூறுவர். சின்முத்திரையுடன் பக்தர்களுக்குக் கூறுவதாவது:-
நான் சத்தியமும் ஆனந்தமும் ஆவேன். நான் என்னுடைய தெய்வீக ஆனந்தத்தில் தினமும் லயித்துக் கொண்டிக்கிறேன். என்னைத் தரிசிக்க வருபவருக்கு அவருடைய சகல துன்பங்களிலிருந்தும் மோட்சம் தரும் ஆத்ம ஞானத்தையும் மூன்று காலங்களிலும் சுகம், ஐஸ்வர்யம், சாந்தி இவை எல்லாம் கொடுத்து அருள்கிறேன் என்று ஐயப்பன் சின்முத்திரை காட்டி அருள்பாலிக்கிறார்.