Loading...
சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சரணடைந்தார். அங்கு மருத்துவ சோதனையில் சசிகலா ஈடுபடுத்தப்பட்டார். அவருக்கு எண் 10711 என்ற சிறை அறையையும், இவருடன் சரணடைந்த இளவரசிக்கு 10712 என்ற அறையையும் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியது.
சசிகலா சிறை செல்வதற்கு முன் அவரது கணவர் நடராஜனை பார்த்து கதறி அழுதார். இதனையடுத்து, அவர் சிறையின் உள்ளே சென்றதாகவும் செய்தி வெளியாகியது.
Loading...
இந்நிலையில், தற்போது சசிகலா மற்றும் இளவரசி இருவரும் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும், சசிகலா, இளவரசி ஆகியோருக்கு களி, சப்பாத்தி உள்ளிட்ட உணவு சசிகலாவுக்கும் வழங்கப்படும் என அவரின் உணவு முறை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading...