ஒரு சாதாரண பணிப் பெண்ணாக ஒரு வீட்டில் நுழைந்து ஒரு மாபெரும் கட்சியின் பொதுச்செயலராக உருவாகி வருபரின் ஒரு கதை சினிமாவாகிறது.
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு சாதாரண பெண் ஒரு ஆளுமை நிறைந்த தலைவிக்கு தோழியாகி இன்று அவரது கட்சிக்கே அல்லது அந்த இயக்கத்துக்கே தலைமை ஏற்கின்ற நிலை வந்துள்ளமை வேறு எங்கும் நடந்துவிட முடியாத நிகழ்வாகும்.
சசிகலா ஜெயலலிதாவுக்கு உடன் பிறவா சகோதரியாகி ஜெயலலிதாவின் அந்தரங்கம், மற்றும் ரகசியங்கள் அனைத்தும் அறிந்தவா் சசிகலாதான். 30 வருடங்களுக்கு மேலாக சொந்த கணவனை விட்டுவிட்டு தோழியுடன் வசித்து வந்தார்.
பெரிய படிப்பாளி, படைப்பாளி கிடையாது, பெயர் சொல்லும் வகையில் அழகும் கிடையாது. பெரிய அரசியல் பாரம்பரிய குடும்பத்தை சோ்ந்தவரும் கிடையாது.
ஆனால், அவா் நினைத்ததை இன்றுவரை செய்து வருகிறார். ஜெயலலிதாதான் அதிமுகவின் பொதுச் செயலாளா், தமிழகத்தின் முதல்வர் ஆனால் ஜெயலலிதாவை ஆட்டி வைத்த பாம்பாட்டி சசிகலாதான்.
ஜெயலலிதா சிறைக்கு செல்ல காரணமானவர். அவரின் இறப்புக்கும் காரணமானவர் என்று கூறப்பட்டாலும், ஜெயலலிதாவையும், சசிகலாவையும் வரலாறு பிரித்து பார்க்க முடியாது.
இப்படிப்பட்ட இரும்பு பெண்மணியின் கதை தயாராகிறது. இந்த படம் தெலுங்கில் எடுக்கப்பட உள்ளது. சசியின் கதாபாத்திரத்திற்கு சன்னிலியோன் நடிக்க வைக்கவும் ஏற்பாடு ஆகிறதாம்.
படத்தின் பெயா் கைதி எண் 9234, இவ்வாறு ஆந்திரா சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.