ஆப்பிள் நிறுவனத்தின் குறைந்த விலை ஐபோன் சீரிசாக ஐபோன் SE விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆப்பளின் புதிய தலைமுறை ஐபோன் SE மாடல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் SE சீரிஸ் மூலம் பட்ஜெட் விலை ஐபோன்களை விற்பனை செய்து வருகிறது. இதுவரை ஐபோன் SE பிரிவில் மூன்று மாடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்து இருக்கிறது. தற்போது வெளியாக இருக்கும் புதிய மாடல் ஐபோன் SE 4-இல் சில மாற்றங்களை செய்ய ஆப்பிள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி ஆப்பிள் ஐபோன் SE 4 அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகமாகும் என்றும் இது ஃபிளாக்ஷிப் கில்லர் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் இது ஏராளமான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு சவால் விடும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் ஐபோன் SE மாடல்கள் கொடுக்கும் விலைக்கு ஏற்ற அம்சங்களை கொண்டிருந்தன. இவற்றின் விற்பனையும் அதிகளவிலேயே நடைபெற்று வந்தது.
தற்போதைய தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் இந்த நிலை விரைவில் மாறும். அதன்படி புதிய ஐபோன் SE சீரிஸ் மேம்பட்ட டிசைன் கொண்டிருக்கும் என்றும் இதன் தோற்றம் ஐபோன் XR போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய ஐபோன் SE மாடலில் ஃபேஸ் ஐடி அம்சம் வழங்கப்படலாம்.
இத்துடன் 6.1 இன்ச் 720 பிக்சல் LCD டிஸ்ப்ளே, IP67 சான்று, 3000 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 7.5 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய ஏ16 பயோனிக் சிப்செட் வழங்கப்படலாம். இதே பிராசஸர் ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ சீரிசில் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 12MP பிரைமரி கேமரா, 7MP செல்ஃபி கேமரா வழங்கப்படலாம்.