ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான `போகன்’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து ஜெயம் ரவி இயக்குநர் விஜய் இயக்கத்தில் `வனமகன்’ படத்திலும், சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் `டிக் டிக் டிக்’ படத்திலும் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க காடுகளில் படமாக்கப்பட்டுள்ள `வனமகன்’ படத்தின் இறுகட்ட படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்தது.
அதன்தொடர்ச்சியாக ஜெயம் ரவி `டிக் டிக் டிக்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக `ஒருநாள் கூத்து’ பட நாயகி நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார். ஜெயம் ரவியின் மூத்த மகன் ஆரவ்வும் இப்படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
விண்வெளி சம்பந்தப்பட்ட கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கிய நிலையில், 45 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதற்காக ஏவிஎம் ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட்டுகளும் போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் விண்வெளியை மையமாக வைத்து எடுக்கப்படும் முதல் படமான `டிக் டிக் டிக்’ படத்தை நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது
இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கவிருக்கிறார். ‘மிருதன்’ படத்திற்கு பிறகு அதே கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.