Loading...
தமிழகத்தில் திமுக திறமையற்ற அரசாக இருப்பதாகவும் அனைத்துத் துறைகளிலும் பாரிய ஊழல் நடைபெறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
கோவையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை தடுக்க தவறியமை மற்றும் மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாமை குறித்தும் விமர்சித்துள்ளார்.
Loading...
மேலும் தி.மு.க ஆட்சியில் மருந்து கொள்முதலில் ஊழல் நடந்து வருகிறது என்றும் காலாவதியாகிய மருந்தும் பயன்பாட்டில் காணப்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
ஊழலுக்கு உதாரணம் திமுகவே என குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, தமிழக ஆளுநர் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Loading...