மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் தயாரித்து பிரபல இயக்குநர் செல்வா இயக்கும் திரைப்படம் `மேஜிக் பாக்ஸ் ப்ரொடக்ஷன் நம்பர் 3′. கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான `புதையல்’ படத்திற்கு பிறகு இயக்குநர் செல்வா இயக்கத்தில். 20 வருடங்களுக்குப் பிறகு அரவிந்த் சாமி மீண்டும் நடிக்க உள்ளார். இப்படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி உள்ளிட்ட 3 நாயகிகள் நடிக்க உள்ளனர்.
முக்கியமான கதாபாத்திரத்தில் தம்பி ராமையா, ஹாசினி, ஹரிஷ் உத்தமன், ராஜ் கபூர், நாகி நீடு, ரமேஷ் பண்டிட் OAK, சுந்தர் உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது. இப்படத்திற்கு கோகுல் ஒளிப்பதிவு செய்ய டி. இமான் இசையமைக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு பணிகளையும், சிவா யாதவ் கலையையும் மேற்கொள்கின்றனர்.