இலங்கையில் 2021ஆம் ஆண்டு 30 ஆயிரம் ரூபாய் உழைத்தவர் இப்போது 50,000 ரூபா உழைத்தால்தான் அதே வாழ்க்கையை கொண்டு நடத்த முடியும் என சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டார்.
நிவாரண திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில், பலவிதமான மக்களுக்கு தேவையான செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன. நிவாரணங்கள் திட்டங்கள் கூட முன்வைக்கப்படவில்லை.
பொதுவாக தற்போது இலங்கையில் விலைவாசிகள் கடுமையாக உயர்வடைந்து இருக்கின்றன. பணவீக்கம் ஆனது 60 வீதமாக காணப்படுகிறது.
இவ்வாறு பணவீக்கம் இருக்கும்போது செலவுகளும் அதிகரிக்கப்படுவது வழமையாகும்.
2021ஆம் ஆண்டு 30 ஆயிரம் ரூபாய் உழைத்தவர் இப்போது 50,000 ரூபா உழைத்தால்தான் அதே வாழ்க்கையை கொண்டு நடத்த முடியும். ஆனால் அதற்கான எந்த விதமான மாற்றங்களும் வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.